திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

தலைப்புகள்

அறத்துப்பால்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்வாழ்க்கை
  6. வாழ்க்கைத் துணைநலம்
  7. மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்
  8. அன்புடைமை
  9. விருந்தோம்பல்
  10. இனியவைகூறல்
  11. செய்ந்நன்றி அறிதல்
  12. நடுவு நிலைமை
  13. அடக்கமுடைமை
  14. ஒழுக்கமுடைமை
  15. பிறனில் விழையாமை
  16. பொறையுடைமை
  17. அழுக்காறாமை
  18. வெஃகாமை
  19. புறங்கூறாமை
  20. பயனில சொல்லாமை
  21. தீவினையச்சம்
  22. ஒப்புரவறிதல்
  23. ஈகை
  24. புகழ்
  25. அருளுடைமை
  26. புலான்மறுத்தல்
  27. தவம்
  28. கூடாவொழுக்கம்
  29. கள்ளாமை
  30. வாய்மை
  31. வெகுளாமை
  32. இன்னாசெய்யாமை
  33. கொல்லாமை
  34. நிலையாமை
  35. துறவு
  36. மெய்யுணர்தல்
  37. அவாவறுத்தல்
  38. ஊழ்

பொருட்பால்

  1. இறைமாட்சி
  2. கல்வி
  3. கல்லாமை
  4. கேள்வி
  5. அறிவுடைமை
  6. குற்றங்கடிதல்
  7. பெரியாரைத் துணைக்கோடல்
  8. சிற்றினஞ்சேராமை
  9. தெரிந்துசெயல்வகை
  10. வலியறிதல்
  11. காலமறிதல்
  12. இடனறிதல்
  13. தெரிந்துதெளிதல்
  14. தெரிந்துவினையாடல்
  15. சுற்றந்தழால்
  16. பொச்சாவாமை
  17. செங்கோன்மை
  18. கொடுங்கோன்மை
  19. வெருவந்தசெய்யாமை
  20. கண்ணோட்டம்
  21. ஒற்றாடல்
  22. ஊக்கமுடைமை
  23. மடியின்மை
  24. ஆள்வினையுடைமை
  25. இடுக்கணழியாமை
  26. அமைச்சு
  27. சொல்வன்மை
  28. வினைத்தூய்மை
  29. வினைத்திட்பம்
  30. வினைசெயல்வகை
  31. தூது
  32. மன்னரைச் சேர்ந்தொழுதல்
  33. குறிப்பறிதல்
  34. அவையறிதல்
  35. அவையஞ்சாமை
  36. நாடு
  37. அரண்
  38. பொருள்செயல்வகை
  39. படைமாட்சி
  40. படைச்செருக்கு
  41. நட்பு
  42. நட்பாராய்தல்
  43. பழைமை
  44. தீ நட்பு
  45. கூடாநட்பு
  46. பேதைமை
  47. புல்லறிவாண்மை
  48. இகல்
  49. பகைமாட்சி
  50. பகைத்திறந்தெரிதல்
  51. உட்பகை
  52. பெரியாரைப் பிழையாமை
  53. பெண்வழிச்சேறல்
  54. வரைவின்மகளிர்
  55. கள்ளுண்ணாமை
  56. சூது
  57. மருந்து
  58. குடிமை
  59. மானம்
  60. பெருமை
  61. சான்றாண்மை
  62. பண்புடைமை
  63. நன்றியில்செல்வம்
  64. நாணுடைமை
  65. குடிசெயல்வகை
  66. உழவு
  67. நல்குரவு
  68. இரவு
  69. இரவச்சம்
  70. கயமை

காமத்துப்பால்

  1. தகையணங்குறுத்தல்
  2. குறிப்பறிதல்
  3. புணர்ச்சிமகிழ்தல்
  4. நலம்புனைந்துரைத்தல்
  5. காதற்சிறப்புரைத்தல்
  6. நாணுத்துறவுரைத்தல்
  7. அலரறிவுறுத்தல்
  8. பிரிவாற்றாமை
  9. படர்மெலிந்திரங்கல்
  10. கண்விதுப்பழிதல்
  11. பசப்புறுபருவரல்
  12. தனிப்படர்மிகுதி
  13. நினைந்தவர்புலம்பல்
  14. கனவுநிலையுரைத்தல்
  15. பொழுதுகண்டிரங்கல்
  16. உறுப்புநலனழிதல்
  17. நெஞ்சொடுகிளத்தல்
  18. நிறையழிதல்
  19. அவர்வயின்விதும்பல்
  20. குறிப்பறிவுறுத்தல்
  21. புணர்ச்சிவிதும்பல்
  22. நெஞ்சொடுபுலத்தல்
  23. புலவி
  24. புலவி நுணுக்கம்
  25. ஊடலுவகை

திருக்குறள் மற்றும் விளக்கங்கள்

அதிகாரம் :

  1. 1பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலேயி றூறிய நீர் விளக்கம்
    விளக்கம்:
    மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
  2. 2உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொ டெம்மிடை நட்பு விளக்கம்
    விளக்கம்:
    இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
  3. 3கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற் கில்லை யிடம் விளக்கம்
    விளக்கம்:
    என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
  4. 4வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து விளக்கம்
    விளக்கம்:
    ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
  5. 5உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம் விளக்கம்
    விளக்கம்:
    போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.
  6. 6கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
    நுண்ணியர்எம் காத லவர் விளக்கம்
    விளக்கம்:
    எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
  7. 7கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக் கறிந்து விளக்கம்
    விளக்கம்:
    எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
  8. 8நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து விளக்கம்
    விளக்கம்:
    எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
  9. 9இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னுமிவ் வூர் விளக்கம்
    விளக்கம்:
    கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
  10. 10உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னுமிவ் வூர் விளக்கம்
    விளக்கம்:
    காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.