-
1பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள விளக்கம்
விளக்கம்:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
-
2விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும் விளக்கம்
விளக்கம்:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
-
3அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று விளக்கம்
விளக்கம்:
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
-
4சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன் விளக்கம்
விளக்கம்:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
-
5கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும் விளக்கம்
விளக்கம்:
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
-
6பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில் விளக்கம்
விளக்கம்:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
-
7காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள விளக்கம்
விளக்கம்:
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
-
8பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் விளக்கம்
விளக்கம்:
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
-
9தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும் விளக்கம்
விளக்கம்:
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
-
10உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல் விளக்கம்
விளக்கம்:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.