திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

தலைப்புகள்

அறத்துப்பால்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்வாழ்க்கை
  6. வாழ்க்கைத் துணைநலம்
  7. மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்
  8. அன்புடைமை
  9. விருந்தோம்பல்
  10. இனியவைகூறல்
  11. செய்ந்நன்றி அறிதல்
  12. நடுவு நிலைமை
  13. அடக்கமுடைமை
  14. ஒழுக்கமுடைமை
  15. பிறனில் விழையாமை
  16. பொறையுடைமை
  17. அழுக்காறாமை
  18. வெஃகாமை
  19. புறங்கூறாமை
  20. பயனில சொல்லாமை
  21. தீவினையச்சம்
  22. ஒப்புரவறிதல்
  23. ஈகை
  24. புகழ்
  25. அருளுடைமை
  26. புலான்மறுத்தல்
  27. தவம்
  28. கூடாவொழுக்கம்
  29. கள்ளாமை
  30. வாய்மை
  31. வெகுளாமை
  32. இன்னாசெய்யாமை
  33. கொல்லாமை
  34. நிலையாமை
  35. துறவு
  36. மெய்யுணர்தல்
  37. அவாவறுத்தல்
  38. ஊழ்

பொருட்பால்

  1. இறைமாட்சி
  2. கல்வி
  3. கல்லாமை
  4. கேள்வி
  5. அறிவுடைமை
  6. குற்றங்கடிதல்
  7. பெரியாரைத் துணைக்கோடல்
  8. சிற்றினஞ்சேராமை
  9. தெரிந்துசெயல்வகை
  10. வலியறிதல்
  11. காலமறிதல்
  12. இடனறிதல்
  13. தெரிந்துதெளிதல்
  14. தெரிந்துவினையாடல்
  15. சுற்றந்தழால்
  16. பொச்சாவாமை
  17. செங்கோன்மை
  18. கொடுங்கோன்மை
  19. வெருவந்தசெய்யாமை
  20. கண்ணோட்டம்
  21. ஒற்றாடல்
  22. ஊக்கமுடைமை
  23. மடியின்மை
  24. ஆள்வினையுடைமை
  25. இடுக்கணழியாமை
  26. அமைச்சு
  27. சொல்வன்மை
  28. வினைத்தூய்மை
  29. வினைத்திட்பம்
  30. வினைசெயல்வகை
  31. தூது
  32. மன்னரைச் சேர்ந்தொழுதல்
  33. குறிப்பறிதல்
  34. அவையறிதல்
  35. அவையஞ்சாமை
  36. நாடு
  37. அரண்
  38. பொருள்செயல்வகை
  39. படைமாட்சி
  40. படைச்செருக்கு
  41. நட்பு
  42. நட்பாராய்தல்
  43. பழைமை
  44. தீ நட்பு
  45. கூடாநட்பு
  46. பேதைமை
  47. புல்லறிவாண்மை
  48. இகல்
  49. பகைமாட்சி
  50. பகைத்திறந்தெரிதல்
  51. உட்பகை
  52. பெரியாரைப் பிழையாமை
  53. பெண்வழிச்சேறல்
  54. வரைவின்மகளிர்
  55. கள்ளுண்ணாமை
  56. சூது
  57. மருந்து
  58. குடிமை
  59. மானம்
  60. பெருமை
  61. சான்றாண்மை
  62. பண்புடைமை
  63. நன்றியில்செல்வம்
  64. நாணுடைமை
  65. குடிசெயல்வகை
  66. உழவு
  67. நல்குரவு
  68. இரவு
  69. இரவச்சம்
  70. கயமை

காமத்துப்பால்

  1. தகையணங்குறுத்தல்
  2. குறிப்பறிதல்
  3. புணர்ச்சிமகிழ்தல்
  4. நலம்புனைந்துரைத்தல்
  5. காதற்சிறப்புரைத்தல்
  6. நாணுத்துறவுரைத்தல்
  7. அலரறிவுறுத்தல்
  8. பிரிவாற்றாமை
  9. படர்மெலிந்திரங்கல்
  10. கண்விதுப்பழிதல்
  11. பசப்புறுபருவரல்
  12. தனிப்படர்மிகுதி
  13. நினைந்தவர்புலம்பல்
  14. கனவுநிலையுரைத்தல்
  15. பொழுதுகண்டிரங்கல்
  16. உறுப்புநலனழிதல்
  17. நெஞ்சொடுகிளத்தல்
  18. நிறையழிதல்
  19. அவர்வயின்விதும்பல்
  20. குறிப்பறிவுறுத்தல்
  21. புணர்ச்சிவிதும்பல்
  22. நெஞ்சொடுபுலத்தல்
  23. புலவி
  24. புலவி நுணுக்கம்
  25. ஊடலுவகை

திருக்குறள் மற்றும் விளக்கங்கள்

அதிகாரம் :

  1. 1தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி விளக்கம்
    விளக்கம்:
    தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
  2. 2வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி விளக்கம்
    விளக்கம்:
    தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
  3. 3வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு விளக்கம்
    விளக்கம்:
    காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
  4. 4வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின் விளக்கம்
    விளக்கம்:
    தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
  5. 5நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை விளக்கம்
    விளக்கம்:
    நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
  6. 6ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
    இருதலை யானும் இனிது விளக்கம்
    விளக்கம்:
    காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
  7. 7பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான் விளக்கம்
    விளக்கம்:
    ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?
  8. 8வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல் விளக்கம்
    விளக்கம்:
    தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
  9. 9நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
    டிசையும் இனிய செவிக்கு விளக்கம்
    விளக்கம்:
    யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
  10. 10உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு விளக்கம்
    விளக்கம்:
    நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.