-
1வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. விளக்கம்
விளக்கம்:
வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெல்லாம் தனக்கு என்ன பலனளிக்கும் என்று எதிர்பார்த்து செய்வதேயாம்.
-
2நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. விளக்கம்
விளக்கம்:
சுவர்க்கம் கிடைக்கும் என்றாலம் ஏற்றுக்கொள்ளுதல்(பிச்சை எடுத்தல், இருக்கும் போது ஏற்றுக்கொள்ளல்) தீதானது. சுவர்க்கம் கிடைக்காது எனினும் ஈய வேண்டும்
-
3இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. விளக்கம்
விளக்கம்:
இல்லை என்னும் துன்பதை உரைக்காமல் இருப்பது ஈதல் என்னும் பெரும் பண்பையுள்ள குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே இருக்கும்
-
4இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. விளக்கம்
விளக்கம்:
இரக்கப்படுதலே பெருமையில்லை. இரந்தவர் இன்முகம் எப்போது அடைகிறாறோ அப்போதே இரத்தல்போல இரக்கப்படுதலும் இனிமையானதாகும்
-
5ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். விளக்கம்
விளக்கம்:
தவம் செய்பவர்களுக்கு பெரும் ஆற்றல் பசி இல்லாமல் போதல் அல்லது பசி பொறுத்தல் ஆனால் அந்த ஆற்றலையும் விட சிறந்தது கொடையினால் மாற்றுவார் ஆற்றலே
-
6அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. விளக்கம்
விளக்கம்:
வறியவறின் பசி தீர்த்தலே பொருளை பெற்றவன் பொருளை வைக்குமிடம். அதாவது தான் பெற்ற செல்வத்தை வைக்கும் இடம் எவ்விடமென்றால்அடுத்தவர் பசி தீர்க்கும் இடமே
-
7பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. விளக்கம்
விளக்கம்:
பகுத்து உண்ணுதல் என்னும் பழக்கம் உடையவனை பசி என்னும் தீப்பிணி என்றும் தீண்டாது.
-
8ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். விளக்கம்
விளக்கம்:
ஈந்து உவக்கும் இன்பத்தை அறியாதவர்கள் யாரென்றால் தன் உடைமையை தானே வைத்துக்கொண்டு பின்பு அதை இழந்துவிடும் அருளில்லாதவர்களே
-
9இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். விளக்கம்
விளக்கம்:
இரத்தல்(பிச்சை எடுத்தல்) இனிமையானது கிடையாது. அதையும் விட துன்பம் தரக்கூடியது நிச்சாயமாக எதுவென்றால் இது தன் செல்வம் போதாது என்று அடுத்தவர்க்கு கொடுக்காமல் தானே சேர்த்துவைத்து உண்ணுதல்.
-
10சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. விளக்கம்
விளக்கம்:
சாதலே கொடுமையாது ஆனால் அதுவே இனிமை தரக்கூடியது அடுத்தவருக்கு கொடுக்க முடியவில்லை யென்றால்
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.