திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

தலைப்புகள்

அறத்துப்பால்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்வாழ்க்கை
  6. வாழ்க்கைத் துணைநலம்
  7. மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்
  8. அன்புடைமை
  9. விருந்தோம்பல்
  10. இனியவைகூறல்
  11. செய்ந்நன்றி அறிதல்
  12. நடுவு நிலைமை
  13. அடக்கமுடைமை
  14. ஒழுக்கமுடைமை
  15. பிறனில் விழையாமை
  16. பொறையுடைமை
  17. அழுக்காறாமை
  18. வெஃகாமை
  19. புறங்கூறாமை
  20. பயனில சொல்லாமை
  21. தீவினையச்சம்
  22. ஒப்புரவறிதல்
  23. ஈகை
  24. புகழ்
  25. அருளுடைமை
  26. புலான்மறுத்தல்
  27. தவம்
  28. கூடாவொழுக்கம்
  29. கள்ளாமை
  30. வாய்மை
  31. வெகுளாமை
  32. இன்னாசெய்யாமை
  33. கொல்லாமை
  34. நிலையாமை
  35. துறவு
  36. மெய்யுணர்தல்
  37. அவாவறுத்தல்
  38. ஊழ்

பொருட்பால்

  1. இறைமாட்சி
  2. கல்வி
  3. கல்லாமை
  4. கேள்வி
  5. அறிவுடைமை
  6. குற்றங்கடிதல்
  7. பெரியாரைத் துணைக்கோடல்
  8. சிற்றினஞ்சேராமை
  9. தெரிந்துசெயல்வகை
  10. வலியறிதல்
  11. காலமறிதல்
  12. இடனறிதல்
  13. தெரிந்துதெளிதல்
  14. தெரிந்துவினையாடல்
  15. சுற்றந்தழால்
  16. பொச்சாவாமை
  17. செங்கோன்மை
  18. கொடுங்கோன்மை
  19. வெருவந்தசெய்யாமை
  20. கண்ணோட்டம்
  21. ஒற்றாடல்
  22. ஊக்கமுடைமை
  23. மடியின்மை
  24. ஆள்வினையுடைமை
  25. இடுக்கணழியாமை
  26. அமைச்சு
  27. சொல்வன்மை
  28. வினைத்தூய்மை
  29. வினைத்திட்பம்
  30. வினைசெயல்வகை
  31. தூது
  32. மன்னரைச் சேர்ந்தொழுதல்
  33. குறிப்பறிதல்
  34. அவையறிதல்
  35. அவையஞ்சாமை
  36. நாடு
  37. அரண்
  38. பொருள்செயல்வகை
  39. படைமாட்சி
  40. படைச்செருக்கு
  41. நட்பு
  42. நட்பாராய்தல்
  43. பழைமை
  44. தீ நட்பு
  45. கூடாநட்பு
  46. பேதைமை
  47. புல்லறிவாண்மை
  48. இகல்
  49. பகைமாட்சி
  50. பகைத்திறந்தெரிதல்
  51. உட்பகை
  52. பெரியாரைப் பிழையாமை
  53. பெண்வழிச்சேறல்
  54. வரைவின்மகளிர்
  55. கள்ளுண்ணாமை
  56. சூது
  57. மருந்து
  58. குடிமை
  59. மானம்
  60. பெருமை
  61. சான்றாண்மை
  62. பண்புடைமை
  63. நன்றியில்செல்வம்
  64. நாணுடைமை
  65. குடிசெயல்வகை
  66. உழவு
  67. நல்குரவு
  68. இரவு
  69. இரவச்சம்
  70. கயமை

காமத்துப்பால்

  1. தகையணங்குறுத்தல்
  2. குறிப்பறிதல்
  3. புணர்ச்சிமகிழ்தல்
  4. நலம்புனைந்துரைத்தல்
  5. காதற்சிறப்புரைத்தல்
  6. நாணுத்துறவுரைத்தல்
  7. அலரறிவுறுத்தல்
  8. பிரிவாற்றாமை
  9. படர்மெலிந்திரங்கல்
  10. கண்விதுப்பழிதல்
  11. பசப்புறுபருவரல்
  12. தனிப்படர்மிகுதி
  13. நினைந்தவர்புலம்பல்
  14. கனவுநிலையுரைத்தல்
  15. பொழுதுகண்டிரங்கல்
  16. உறுப்புநலனழிதல்
  17. நெஞ்சொடுகிளத்தல்
  18. நிறையழிதல்
  19. அவர்வயின்விதும்பல்
  20. குறிப்பறிவுறுத்தல்
  21. புணர்ச்சிவிதும்பல்
  22. நெஞ்சொடுபுலத்தல்
  23. புலவி
  24. புலவி நுணுக்கம்
  25. ஊடலுவகை

திருக்குறள் மற்றும் விளக்கங்கள்

அதிகாரம் :

  1. 1தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வருஞ் சேர்வது நாடு விளக்கம்
    விளக்கம்:
    குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
  2. 2பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு விளக்கம்
    விளக்கம்:
    மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
  3. 3பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
    கிறையொருங்கு நேர்வது நாடு விளக்கம்
    விளக்கம்:
    (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
  4. 4உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு விளக்கம்
    விளக்கம்:
    மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
  5. 5பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு விளக்கம்
    விளக்கம்:
    பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
  6. 6கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை விளக்கம்
    விளக்கம்:
    பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
  7. 7இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு விளக்கம்
    விளக்கம்:
    ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
  8. 8பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து விளக்கம்
    விளக்கம்:
    நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
  9. 9நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு விளக்கம்
    விளக்கம்:
    முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
  10. 10ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு விளக்கம்
    விளக்கம்:
    நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.