-
1அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. விளக்கம்
விளக்கம்:
தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல, நம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நன்று.
-
2பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. விளக்கம்
விளக்கம்:
தவறைப் பொறுத்தல் நீங்காத புகழ் தரும் என்றாலும், அதனை மறத்தல் அதனிலும் நல்லது.
-
3இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. விளக்கம்
விளக்கம்:
விருந்தினரை வரவேற்க இயலாத வறுமை மிகவும் கொடியது; மடமுடையோரின் செயலைப் பொறுத்தல் மிகுந்த வலிமை உடையது
-
4நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும். விளக்கம்
விளக்கம்:
தான் பெற்ற புகழ் நிலைத்திருக்க நினைப்பவர் பொறுமையை கடை பிடித்தல் வேண்டும்.
-
5ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. விளக்கம்
விளக்கம்:
தன்னை தண்டித்தவரை வெறுக்காது பொறுத்து அரவணைப்பவரை பொன்னைப் போல் போற்றுவர்.
-
6ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். விளக்கம்
விளக்கம்:
தண்டித்தவருக்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தவறுக்கு அவர் மறையும் வரை புகழ் நிலைக்கும்.
-
7திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. விளக்கம்
விளக்கம்:
பிறர் நமக்கு தவறிழைப்பினும் அதனால் வெகுண்டு அறன் அல்லாதவற்றை செய்தல் கூடாது
-
8மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். விளக்கம்
விளக்கம்:
ஆணவத்தால் தவறிழைப்பவரை, அவற்றைப் பொறுக்கும் தகுதியால் வென்று விடலாம்.
-
9துறந்தாரின் தூய்மை உடையவர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். விளக்கம்
விளக்கம்:
தன்னை இகழும் சொற்களைப் பொறுத்தோர் துறவிகளை விட தூய்மை உடையவராக கருதப் படுவர்.
-
10உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். விளக்கம்
விளக்கம்:
உண்ணாமல் நோன்பிருக்கும் பெரியார் ஆயினும், தன்னை இகழ்ந்துரைத்த சொற்களைப் பொறுத்தவருக்கு பின்னால் தான் வரிசைப் படுத்தப் படுவர்.
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.