திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

தலைப்புகள்

அறத்துப்பால்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்வாழ்க்கை
  6. வாழ்க்கைத் துணைநலம்
  7. மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்
  8. அன்புடைமை
  9. விருந்தோம்பல்
  10. இனியவைகூறல்
  11. செய்ந்நன்றி அறிதல்
  12. நடுவு நிலைமை
  13. அடக்கமுடைமை
  14. ஒழுக்கமுடைமை
  15. பிறனில் விழையாமை
  16. பொறையுடைமை
  17. அழுக்காறாமை
  18. வெஃகாமை
  19. புறங்கூறாமை
  20. பயனில சொல்லாமை
  21. தீவினையச்சம்
  22. ஒப்புரவறிதல்
  23. ஈகை
  24. புகழ்
  25. அருளுடைமை
  26. புலான்மறுத்தல்
  27. தவம்
  28. கூடாவொழுக்கம்
  29. கள்ளாமை
  30. வாய்மை
  31. வெகுளாமை
  32. இன்னாசெய்யாமை
  33. கொல்லாமை
  34. நிலையாமை
  35. துறவு
  36. மெய்யுணர்தல்
  37. அவாவறுத்தல்
  38. ஊழ்

பொருட்பால்

  1. இறைமாட்சி
  2. கல்வி
  3. கல்லாமை
  4. கேள்வி
  5. அறிவுடைமை
  6. குற்றங்கடிதல்
  7. பெரியாரைத் துணைக்கோடல்
  8. சிற்றினஞ்சேராமை
  9. தெரிந்துசெயல்வகை
  10. வலியறிதல்
  11. காலமறிதல்
  12. இடனறிதல்
  13. தெரிந்துதெளிதல்
  14. தெரிந்துவினையாடல்
  15. சுற்றந்தழால்
  16. பொச்சாவாமை
  17. செங்கோன்மை
  18. கொடுங்கோன்மை
  19. வெருவந்தசெய்யாமை
  20. கண்ணோட்டம்
  21. ஒற்றாடல்
  22. ஊக்கமுடைமை
  23. மடியின்மை
  24. ஆள்வினையுடைமை
  25. இடுக்கணழியாமை
  26. அமைச்சு
  27. சொல்வன்மை
  28. வினைத்தூய்மை
  29. வினைத்திட்பம்
  30. வினைசெயல்வகை
  31. தூது
  32. மன்னரைச் சேர்ந்தொழுதல்
  33. குறிப்பறிதல்
  34. அவையறிதல்
  35. அவையஞ்சாமை
  36. நாடு
  37. அரண்
  38. பொருள்செயல்வகை
  39. படைமாட்சி
  40. படைச்செருக்கு
  41. நட்பு
  42. நட்பாராய்தல்
  43. பழைமை
  44. தீ நட்பு
  45. கூடாநட்பு
  46. பேதைமை
  47. புல்லறிவாண்மை
  48. இகல்
  49. பகைமாட்சி
  50. பகைத்திறந்தெரிதல்
  51. உட்பகை
  52. பெரியாரைப் பிழையாமை
  53. பெண்வழிச்சேறல்
  54. வரைவின்மகளிர்
  55. கள்ளுண்ணாமை
  56. சூது
  57. மருந்து
  58. குடிமை
  59. மானம்
  60. பெருமை
  61. சான்றாண்மை
  62. பண்புடைமை
  63. நன்றியில்செல்வம்
  64. நாணுடைமை
  65. குடிசெயல்வகை
  66. உழவு
  67. நல்குரவு
  68. இரவு
  69. இரவச்சம்
  70. கயமை

காமத்துப்பால்

  1. தகையணங்குறுத்தல்
  2. குறிப்பறிதல்
  3. புணர்ச்சிமகிழ்தல்
  4. நலம்புனைந்துரைத்தல்
  5. காதற்சிறப்புரைத்தல்
  6. நாணுத்துறவுரைத்தல்
  7. அலரறிவுறுத்தல்
  8. பிரிவாற்றாமை
  9. படர்மெலிந்திரங்கல்
  10. கண்விதுப்பழிதல்
  11. பசப்புறுபருவரல்
  12. தனிப்படர்மிகுதி
  13. நினைந்தவர்புலம்பல்
  14. கனவுநிலையுரைத்தல்
  15. பொழுதுகண்டிரங்கல்
  16. உறுப்புநலனழிதல்
  17. நெஞ்சொடுகிளத்தல்
  18. நிறையழிதல்
  19. அவர்வயின்விதும்பல்
  20. குறிப்பறிவுறுத்தல்
  21. புணர்ச்சிவிதும்பல்
  22. நெஞ்சொடுபுலத்தல்
  23. புலவி
  24. புலவி நுணுக்கம்
  25. ஊடலுவகை

திருக்குறள் மற்றும் விளக்கங்கள்

அதிகாரம் :

  1. 1பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது விளக்கம்
    விளக்கம்:
    காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
  2. 2பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு விளக்கம்
    விளக்கம்:
    காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
  3. 3அருவினை யென்ப உளவோ கருவியாற்
    கால மறிந்து செயின் விளக்கம்
    விளக்கம்:
    (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
  4. 4ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
    கருதி இடத்தாற் செயின் விளக்கம்
    விளக்கம்:
    (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
  5. 5காலங் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர் விளக்கம்
    விளக்கம்:
    உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
  6. 6ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து விளக்கம்
    விளக்கம்:
    ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
  7. 7பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்பர் ஒள்ளி யவர் விளக்கம்
    விளக்கம்:
    அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
  8. 8செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
    காணிற் கிழக்காந் தலை விளக்கம்
    விளக்கம்:
    பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
  9. 9எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல் விளக்கம்
    விளக்கம்:
    கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
  10. 10கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து விளக்கம்
    விளக்கம்:
    பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.