திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

தலைப்புகள்

அறத்துப்பால்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்வாழ்க்கை
  6. வாழ்க்கைத் துணைநலம்
  7. மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்
  8. அன்புடைமை
  9. விருந்தோம்பல்
  10. இனியவைகூறல்
  11. செய்ந்நன்றி அறிதல்
  12. நடுவு நிலைமை
  13. அடக்கமுடைமை
  14. ஒழுக்கமுடைமை
  15. பிறனில் விழையாமை
  16. பொறையுடைமை
  17. அழுக்காறாமை
  18. வெஃகாமை
  19. புறங்கூறாமை
  20. பயனில சொல்லாமை
  21. தீவினையச்சம்
  22. ஒப்புரவறிதல்
  23. ஈகை
  24. புகழ்
  25. அருளுடைமை
  26. புலான்மறுத்தல்
  27. தவம்
  28. கூடாவொழுக்கம்
  29. கள்ளாமை
  30. வாய்மை
  31. வெகுளாமை
  32. இன்னாசெய்யாமை
  33. கொல்லாமை
  34. நிலையாமை
  35. துறவு
  36. மெய்யுணர்தல்
  37. அவாவறுத்தல்
  38. ஊழ்

பொருட்பால்

  1. இறைமாட்சி
  2. கல்வி
  3. கல்லாமை
  4. கேள்வி
  5. அறிவுடைமை
  6. குற்றங்கடிதல்
  7. பெரியாரைத் துணைக்கோடல்
  8. சிற்றினஞ்சேராமை
  9. தெரிந்துசெயல்வகை
  10. வலியறிதல்
  11. காலமறிதல்
  12. இடனறிதல்
  13. தெரிந்துதெளிதல்
  14. தெரிந்துவினையாடல்
  15. சுற்றந்தழால்
  16. பொச்சாவாமை
  17. செங்கோன்மை
  18. கொடுங்கோன்மை
  19. வெருவந்தசெய்யாமை
  20. கண்ணோட்டம்
  21. ஒற்றாடல்
  22. ஊக்கமுடைமை
  23. மடியின்மை
  24. ஆள்வினையுடைமை
  25. இடுக்கணழியாமை
  26. அமைச்சு
  27. சொல்வன்மை
  28. வினைத்தூய்மை
  29. வினைத்திட்பம்
  30. வினைசெயல்வகை
  31. தூது
  32. மன்னரைச் சேர்ந்தொழுதல்
  33. குறிப்பறிதல்
  34. அவையறிதல்
  35. அவையஞ்சாமை
  36. நாடு
  37. அரண்
  38. பொருள்செயல்வகை
  39. படைமாட்சி
  40. படைச்செருக்கு
  41. நட்பு
  42. நட்பாராய்தல்
  43. பழைமை
  44. தீ நட்பு
  45. கூடாநட்பு
  46. பேதைமை
  47. புல்லறிவாண்மை
  48. இகல்
  49. பகைமாட்சி
  50. பகைத்திறந்தெரிதல்
  51. உட்பகை
  52. பெரியாரைப் பிழையாமை
  53. பெண்வழிச்சேறல்
  54. வரைவின்மகளிர்
  55. கள்ளுண்ணாமை
  56. சூது
  57. மருந்து
  58. குடிமை
  59. மானம்
  60. பெருமை
  61. சான்றாண்மை
  62. பண்புடைமை
  63. நன்றியில்செல்வம்
  64. நாணுடைமை
  65. குடிசெயல்வகை
  66. உழவு
  67. நல்குரவு
  68. இரவு
  69. இரவச்சம்
  70. கயமை

காமத்துப்பால்

  1. தகையணங்குறுத்தல்
  2. குறிப்பறிதல்
  3. புணர்ச்சிமகிழ்தல்
  4. நலம்புனைந்துரைத்தல்
  5. காதற்சிறப்புரைத்தல்
  6. நாணுத்துறவுரைத்தல்
  7. அலரறிவுறுத்தல்
  8. பிரிவாற்றாமை
  9. படர்மெலிந்திரங்கல்
  10. கண்விதுப்பழிதல்
  11. பசப்புறுபருவரல்
  12. தனிப்படர்மிகுதி
  13. நினைந்தவர்புலம்பல்
  14. கனவுநிலையுரைத்தல்
  15. பொழுதுகண்டிரங்கல்
  16. உறுப்புநலனழிதல்
  17. நெஞ்சொடுகிளத்தல்
  18. நிறையழிதல்
  19. அவர்வயின்விதும்பல்
  20. குறிப்பறிவுறுத்தல்
  21. புணர்ச்சிவிதும்பல்
  22. நெஞ்சொடுபுலத்தல்
  23. புலவி
  24. புலவி நுணுக்கம்
  25. ஊடலுவகை

திருக்குறள் மற்றும் விளக்கங்கள்

அதிகாரம் :

  1. 1ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்று மடி விளக்கம்
    விளக்கம்:
    கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
  2. 2பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூ ழுற்றக் கடை விளக்கம்
    விளக்கம்:
    பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
  3. 3நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும் விளக்கம்
    விளக்கம்:
    ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
  4. 4இருவே றுலகத் தியற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு விளக்கம்
    விளக்கம்:
    உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
  5. 5நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
    நல்லவாஞ் செல்வஞ் செயற்கு விளக்கம்
    விளக்கம்:
    செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
  6. 6பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம விளக்கம்
    விளக்கம்:
    ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
  7. 7வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது விளக்கம்
    விளக்கம்:
    ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
  8. 8துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின் விளக்கம்
    விளக்கம்:
    வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
  9. 9நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன் விளக்கம்
    விளக்கம்:
    நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.
  10. 10ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும் விளக்கம்
    விளக்கம்:
    ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.